57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த 3 முன்னணி இயக்குநர்கள்: உணர்வுகள்தான் சினிமாவின் உயிர் என கருத்து

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2026 6:01PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2342816Views: 8

2001-ம் ஆண்டு இந்தி சினிமாவில் புதிய மாற்றங்களை ஏற்படுத்திய 'லகான்', 'தில் சாஹ்தா ஹை', 'சாந்தினி பார்' ஆகிய திரைப்படங்களை உருவாக்கிய இயக்குநர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்தனர்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 57-வது பதிப்பையொட்டி நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலில் இயக்குநர்கள் திரு மதுர் பண்டார்கர், திரு அசுதோஷ் கோவாரிகர், திரு ஃபர்ஹான் அக்தர் ஆகியோர் பங்கேற்றனர்.

திரைப்படங்கள் சமூகத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும் என திரு மதுர் பண்டார்கர் தெரிவித்தார். பெண்களின் வாழ்க்கை, சமூகத்தில் பேசப்படாத உண்மைகள் ஆகியவற்றைத் தனது திரைப்படங்களில் வெளிப்படுத்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு, காட்சி விளைவுகள் திரைப்படத் தயாரிப்பை மேம்படுத்தினாலும், மனித உணர்வுகளை அவற்றால் மாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு புதிய திரைப்படமும் புதிய விஷயங்களைச் சொல்வதற்கான வாய்ப்பு என திரு அசுதோஷ் கோவாரிகர் தெரிவித்தார். ஒரு திரைப்படத்தை அதன் முதல் வார வசூலை மட்டும் வைத்து மதிப்பிடக் கூடாது என்று அவர் கூறினார். நடிகர்களின் நடிப்பில் வசனங்களை விட இடைவெளிகள், முகபாவனைகள், பிறர் பேசுவதைக் கவனித்துக் கேட்பது ஆகியவை முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திரு ஃபர்ஹான் அக்தர், இயக்குநர்களும் எழுத்தாளர்களும் தங்களது தனிப்பட்ட அகந்தையை ஒதுக்கிவிட்டு, தங்கள் படைப்பாற்றல் மீது நம்பிக்கை வைத்து அச்சமின்றி கதைகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மனித அனுபவங்கள், உணர்வுகள், புதுமையான கதை சொல்லல் ஆகியவையே சிறந்த சினிமாவுக்கு அடிப்படை என இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலை நடிகை குஷ்பூ சுந்தர் ஒருங்கிணைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342705&reg=3&lang=1

(Release ID : 2342705)

****

SK/PLM/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342816
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026