இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

சாமரா முதலீட்டு நிறுவனங்களின் பங்கு கையகப்படுத்தல் திட்டத்துக்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2026 1:28PM by PIB Chennai

இந்திய போட்டி ஆணையம், சாமரா மாற்று முதலீட்டு நிதியத்தின் இரண்டு பிரிவுகள், காலிக்ஸ் கன்டெய்னர் டெர்மினல்ஸ் நிறுவனம், அசோசியேட்டட் ரோடு கேரியர்ஸ் நிறுவனம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, சாமரா மாற்று முதலீட்டு நிதித் திட்டம்-1, சாமரா மாற்று முதலீட்டு நிதித் திட்டம் 3  ஆகிய இரண்டு பிரிவுகளும் இணைந்து, காலிக்ஸ் கன்டெய்னர் டெர்மினல்ஸ் நிறுவனத்தில் பங்குகளை வாங்க உள்ளன.

தொடர்ந்து, காலிக்ஸ் நிறுவனம், அசோசியேட்டட் ரோடு கேரியர்ஸ் நிறுவனத்தில் பங்குகளை வாங்கும். பின்னர், காலிக்ஸ் நிறுவனம், அசோசியேட்டட் ரோடு கேரியர்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளது.

சாமரா முதலீட்டு நிதி நிறுவனங்கள், இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியத்தில் (செபி), 2012-ம் ஆண்டு மாற்று முதலீட்டு நிதி விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட இரண்டாம் வகை மாற்று முதலீட்டு நிதி நிறுவனங்களாகும்.

காலிக்ஸ் நிறுவனம் 2006-ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. இது சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் சேவைகளை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342455&reg=3&lang=1  

***

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342738) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi