சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் பயன்பாடு தடுப்பு குறித்த வினாடி வினா போட்டியில் 74,636 பேர் பங்கேற்றனர்

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 4:00PM by PIB Chennai

மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில், நஷா முக்த் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், போதைப்பொருள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இணையவழியில் நடைபெற்ற இந்த போட்டியில், நாடு முழுவதிலும் இருந்து 74,636 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். பங்கேற்பாளர்களுக்கு 20 கேள்விகள் கேட்கப்படட நிலையில், சராசரியாக 13.82 மதிப்பெண்களை பெற்றனர். வினாடி வினாவை முடிக்க பங்கேற்பாளர்கள் சராசரியாக 4 நிமிடங்கள் எடுத்துக்கொண்டனர். போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதுகுறித்த விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தவும் இந்த வினாடி வினா போட்டி நடத்தப்பட்டதாக, சமூக நீதி அதிகாரமளித்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இணையவழியாக நத்தப்பட்ட இப்போட்டியில், வினாக்களை வெற்றிகரமாக சமர்பித்தவர்களுக்கு பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது.                           

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341929&reg=3&lang=1

***

SK/LN/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2342545) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Urdu , Telugu , Marathi