நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விவேகமான வங்கி நடைமுறைகள், வலுவான கடன் மதிப்பீட்டுத் திறன்களின் மூலம் மேலும் வலிமையடையும் பொதுத்துறை வங்கிகள்

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 6:47PM by PIB Chennai

பொதுத்துறை வங்கிகள், உயர்தர சொத்துகளுடன் தொடர்ந்து விரைவான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன. சீர்திருத்தங்களின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட விவேகமான கடன் மதிப்பீட்டு நடைமுறைகளும், பயனுள்ள இடர் மேலாண்மைக் கொள்கைகளும் இதற்கு வலுவான ஆதரவை வழங்குகின்றன. பொதுத்துறை வங்கிகளில் கொண்டுவரப்பட்ட இந்த முறையான சீர்திருத்தங்கள், பல்வேறு துறைகளில், குறிப்பாக உற்பத்தி சார்ந்த கடன் வளர்ச்சியில், உயர்தரமான, வேகமான முன்னேற்றத்தை ஏற்படுத்தி நல்ல பலன்களைத் தந்து கொண்டிருக்கின்றன.

பொதுத்துறை வங்கிகளின் கடன் வழங்கல் கடந்த 5 ஆண்டுகளில் 15.1% என்ற வேகமான வளர்ச்சியைக் கண்டு, 30.9.2026 நிலவரப்படி ரூ. 127 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதேவேளையில், வாராக்கடனாக மாறும் கடன்களின் அளவு வேகமாகக் குறைந்து வருவது, கடன் வழங்குவதில் பொதுத்துறை வங்கிகள் மிகுந்த கவனத்துடனும், நிதி ஒழுக்கத்துடனும் செயல்படுவதைக் காட்டுகிறது.

பொதுத்துறை வங்கிகள், உற்பத்தி, நுகர்வு ஆகிய இரு துறைகளுக்கும் கடன் வழங்கி வருகின்றன; சில்லறை வணிகம், விவசாயம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் என அனைத்துத் துறைகளிலும் கடன் வளர்ச்சி சமச்சீரான முறையில் உயர்ந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342160&reg=3&lang=1

****

SK/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342333) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese