இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2026 8:00PM by PIB Chennai
இந்திய-ஐக்கிய அரபு அமீரக கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் 14-வது கூட்டம், இன்று அபுதாபியில் நடைபெற்றது. இந்திய பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் இப்ராஹிம் நாசர் எம். அல் அலாவி ஆகியோர் இணைந்து இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர். இந்தியக் குழுவில் பாதுகாப்புத் துறை, இந்தியப் பாதுகாப்புப் படைகள், தேசியப் பாதுகாப்புக் கவுன்சில் செயலகம், வெளியுறவு அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர்.
பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான இந்தியக் குழுவினர், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான இணை அமைச்சர் திரு முகமது பின் முபாரக் ஃபதேல் அல் மஸ்ரூயியைச் சந்தித்துப் பேசினர். வளைகுடா மற்றும் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் உருவாகி வரும் புவிசார் அரசியல் சூழல் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதுடன், தங்களது உத்திசார் பாதுகாப்புப் பங்களிப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342210®=3&lang=1
****
SK/BR/SH