குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

உச்சநீதிமன்றம் ஏற்பாடு செய்திருந்த அரசியலமைப்பு தினக் கொண்டாட்டங்களில் குடியரசுத்தலைவர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 7:43PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, புதுதில்லியில் இன்று உச்சநீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியலமைப்பு தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

நமது குடியரசின் மகத்தான பயணத்தில் உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் கீழ்நிலை நீதிமன்றங்கள் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கியுள்ளதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார். கடந்த சில தசாப்தங்களாக, வாழ்க்கையின் பல தளங்களில் கற்பனை செய்ய முடியாத மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, தொழில்நுட்பம், ஊடகங்களின் தாக்கம் முன்னெப்போதையும் விட பெருமளவில் பரவியுள்ளதாக அவர் தெரிவித்தார். மாறிவரும் சூழல்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்பத் தனது பங்கினை மாற்றியமைத்துக்கொண்ட அதே வேளையில், நீதித்துறை நீதிக்கான அடிப்படை மாண்புகளைக் கட்டிக்காத்து மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று  அவர் கூறினார்.

உரிய நேரத்தில் நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்கு, எளிமையான நடைமுறை, தொழில்நுட்ப பயன்பாடு, சிறப்பு நீதிமன்றங்களின் உருவாக்கம் போன்ற பல்வேறு முன்முயற்சிகளை நீதித்துறை மேற்கொண்டு வருகிறது என்பதை சுட்டிக்காட்டிய குடியரசுத்தலைவர், இத்தகைய முயற்சிகள் இருந்தபோதிலும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, நமது நீதி வழங்கும் அமைப்பிற்கு ஒரு பெரும் சவாலாகவே நீடிக்கிறது என்று குறிப்பிட்டார். நீதித்துறையின் அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் இந்தச் சவால் எதிர்கொள்ளப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342198&reg=3&lang=1

****

SK/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342303) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam