சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுகாதாரத் துறையில் கூடுதல் முதலீடு மற்றும் பொது-தனியார் கூட்டாண்மையின் அவசியத்தை மத்திய சுகாதாரச் செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா வலியுறுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 4:28PM by PIB Chennai

பெங்களூருவில் நடைபெற்ற தேசிய சுகாதார இயக்கம் (NHM) மற்றும் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் குறித்த இரண்டு நாள் தேசிய அளவிலான வழிகாட்டுதல் பட்டறையில் மத்திய சுகாதாரச் செயலாளர் திருமதி. புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா உரையாற்றினார்.

₹64,180 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்ட PM-ABHIM திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 19,983 உள்கட்டமைப்பு அலகுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 2,151 வட்டாரப் பொது சுகாதார அலகுகள், 744 ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள், 631 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் அடங்கும்.

நோய் கண்காணிப்பு, தொற்றுநோய் ஆராய்ச்சி, அவசரகால நடமாடும் மருத்துவமனைக் கருவிகள் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் தளம் ஆகியவற்றை வலுப்படுத்தவும், ஒப்புதல் பெற்ற கட்டமைப்புகளை விரைந்து செயல்பாட்டிற்குக் கொண்டு வரவும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: http://pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341965&reg=3&lang=1&_gl=1*

****

SK/NB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342266) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Kannada