மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

மக்களவைத் தலைவர், ரபி ராய்க்கு மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 1:46PM by PIB Chennai

முன்னாள் மக்களவைத் தலைவர் ரபி ராய் பிறந்தநாளையொட்டி, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று புதுதில்லியில், அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ரபி ராய்க்கு மரியாதை செலுத்தினர். மக்களவையின் பொதுச் செயலாளர் திரு உத்பால் குமார் சிங், மாநிலங்களவையின் பொதுச் செயலாளர் திரு பி சி மோடி ஆகியோரும் ரபி ராய் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திரு ரபி ராய், ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தில் உள்ள பானராகர் கிராமத்தில்,  1926-ம் ஆண்டு பிறந்தார்.    1967-ம் ஆண்டில் 4-வது மக்களவைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட  ரபி ராய், மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 9-வது மக்களவையின் தலைவராக 1989 டிசம்பர் முதல் 1991 ஜூலை 9-ம் தேதி வரை பதவி வகித்த பெருமைக்குரியவர் ஆவார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341812&reg=3&lang=1&_gl=1

 

***

SS/LN/SH  

 


(வெளியீட்டு அடையாள எண்: 2342203) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Kannada