இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2026 5:48PM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி ஆகியோர், புதுதில்லியில் பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த தேசிய பிரச்சாரத்தின் ஐந்தாவது பதிப்பைத் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, 'வன்முறையற்ற கிராம முன்முயற்சி’ குறித்த ஒரு முக்கிய நான்கு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் ஊரக வளர்ச்சித் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், நீதித் துறை, தேசிய சட்ட சேவைகள் ஆணையம் ஆகியவை கையெழுத்திட்டன.
நிகழ்ச்சியல் பேசிய திரு சிவராஜ் சிங் சவுகான், பெண்களுக்கு அதிகாரமளித்தல், கண்ணியம், மரியாதை ஆகியவை வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையின் மையமாக உள்ளதாகக் கூறினார். மேலும், கிராமப்புறப் பொருளாதாரத்திற்கு சுமார் 3.75 கோடி லட்சாதிபதி சகோதரிகள் அளித்துள்ள பங்களிப்பைப் பாராட்டினார். பொருளாதார சுதந்திரம் என்பது, கண்ணியம், பாதுகாப்பு, சம வாய்ப்புகளுடன் இணைந்து இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஆணாதிக்க மனநிலைகளை எதிர்கொள்ள கூட்டு முயற்சி தேவை என்று கேட்டுக் கொண்டார். இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்ப்பதில் சமூக அமைப்புகளின் பங்களிப்பு முக்கியம் என்று திருமதி அன்னபூர்ணா தேவி வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2341403®=3&lang=1
***
SK/BR/PS