இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2026 11:45AM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தேசிய நிலப் பணமாக்கல் கழகத்தின் 22-வது இயக்குநர்கள் குழுக் கூட்டம் புதுதில்லியில் நேற்று (2026 நவம்பர் 25) நடைபெற்றது.
நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.9,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான சொத்துகள் பணமாக்கப்பட்டுள்ள நிலையில், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் ரூ.1,300 கோடி மதிப்பிலான புதிய சொத்துப் பணமாக்கல், மதிப்பீட்டு முன்மொழிவுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், புதுதில்லி, மும்பையில் உள்ள தேசிய நிலப் பணமாக்கல் கழகத்திற்குச் சொந்தமான 17 குடியிருப்புகளின் சொத்துகளைச் சந்தைப்படுத்துவது குறித்த மதிப்பீட்டு அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டன. மேலும், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்ஐஎன்எல் நிறுவனம் சார்பாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட 2 மின்னணு ஏலங்கள் மூலம் 264 நிலப்பகுதிகளுக்கு ரூ. 584.40 கோடி மதிப்பிலான ஏலத் தொகை ஈட்டப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341730®=3&lang=1&_gl=1
***
SS/PD/PS