வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026-27-ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான சேவை உற்பத்தியாளர் விலை குறித்த தற்காலிக விவரங்கள் வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2026 12:00PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், 2022-23-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு, 2026-27-ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான தற்காலிக சேவை உற்பத்தியாளர் விலைக் குறியீடு விவரங்களையும், முதல் காலாண்டிற்கான இறுதிக் குறியீடு விவரங்களையும் இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, பிணையப் பத்திரங்கள் பரிவர்த்தனை சேவை விலைக் குறியீடு முதல் காலாண்டில் 89.9 ஆக இருந்த நிலையில், இரண்டாம் காலாண்டில் 86.0 ஆகப் பதிவாகியுள்ளது. வங்கிச் சேவை விலைக் குறியீடு 99.2-லிருந்து 99.5 ஆகவும், வங்கிச் சேவைப் பங்களிப்புக் குறியீடு 129.4-லிருந்து 134.7 ஆகவும் உயர்ந்துள்ளது. ஓய்வூதிய நிதி மேலாண்மைச் சேவை விலைக் குறியீடு 113.6-லிருந்து 109.5 ஆகக் குறைந்துள்ளது. காப்பீட்டுச் சேவை விலைக் குறியீடு 102.9-லிருந்து 103.2 ஆக அதிகரித்துள்ளது. தொலைத்தொடர்புச் சேவை விலைக் குறியீடு 112.2 என்ற அளவிலேயே மாற்றமின்றித் தொடர்கிறது.

ரயில்வே சேவை விலைக் குறியீடு 103.4-லிருந்து 102.7 ஆகப் பதிவாகியுள்ளது; இதில் ரயில்வே சரக்குச் சேவை விலைக் குறியீடு 102.3 ஆகவும், பயணிகள் சேவை விலைக் குறியீடு 103.5 ஆகவும் உள்ளன. விமானப் பயணிகள் சேவைக்கான விலைக் குறியீடு 126.4-லிருந்து 127.8 ஆக உயர்ந்துள்ளது. 2026-27-ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான சேவை உற்பத்தியாளர் விலைக் குறியீடுகள் 2027 பிப்ரவரி 24 அன்று வெளியிடப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341076&reg=48&lang=1&_gl=1

****

SK/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2341576) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi