இடுகை இடப்பட்ட நாள்:
23 NOV 2026 9:35PM by PIB Chennai
திட்டங்கள் அர்ப்பணிப்பு:
நேபாளப் பிரதமரின் இந்திய அரசு முறைப் பயணத்தின் போது பல்வேறு முக்கியத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. அயோத்தி மற்றும் நேபாளத்தின் ஜனக்பூர் இடையே சரயு-கமலா விரைவு ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
பன்பசாவில் புதிய ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன், பைரஹாவா, சுனௌலி, தோதாரா சாந்தனி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்தியாவின் தார்ச்சுலா, நேபாளத்தின் தர்ச்சுலா இடையே வாகனப் போக்குவரத்துக்கான புதிய எல்லை கடந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது.
மேலும், 669 மெகாவாட் திறன் கொண்ட அருண் நீர்மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
மோதிஹரி-அம்லேக்கஞ்ச் எண்ணெய் குழாய் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
சிலிகுரி-ஜாபா பெட்ரோலியக் குழாய் திட்டத்தின் கீழ் ஜாபா பெட்ரோலிய முனையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அறிவிப்புகள்:
இப்பயணத்தின் போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. நேபாளத்தின் மறுகட்டமைப்பு, நீண்டகால வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் ரூ. 15,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி ஒத்துழைப்புத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது.
நேபாளத்தின் சரக்குப் போக்குவரத்திற்காக குஜராத் மாநிலம் காண்ட்லாவில் உள்ள தீன்தயாள் துறைமுகம், ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகம் ஆகிய இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் சித்வானில் வேளாண்-தொழில்துறை பூங்கா அமைத்தல்.
நேபாளத்தில் ஐஐடியின் வெளிநாட்டு வளாகம் அமைத்தல்.
முன்மொழியப்பட்டுள்ள ரக்சால்-காத்மாண்டு மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதைக்கான இறுதிகட்ட நில ஆய்வுப் பணிகளை நிறைவு செய்தல் ஆகிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
இரு நாடுகளுக்கும் இடையே எட்டு முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம், நேபாள காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை இடையே கல்வி, ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம், நேபாளத்தின் தேசிய காவல் அகாடமி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
நேபாள குடிமைப் பணி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்திற்காக மத்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் கீழ் செயல்படும் தேசிய நல்லாட்சி மையம், நேபாள அரசின் கூட்டாட்சி விவகாரங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேபாள நிர்வாகப் பணியாளர் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஆயுர்வேதம், பிற பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒத்துழைப்புக்காக இந்திய அரசு, நேபாள அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தெற்காசிய செயற்கைக்கோளைப் பயன்படுத்துவதற்கான செயற்கைக்கோள் தகவல் தொடர்பு கட்டமைப்பை நிறுவுவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நேபாள அரசின் தகவல், தொடர்பு அமைச்சகம் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
நிலையான நகர்ப்புற வளர்ச்சியில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்.
சுகாதாரம், மருத்துவத் துறையில் ஒத்துழைப்புக்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கும், நேபாள சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
கால்நடை பராமரிப்பு, மீன்வள மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340650®=3&lang=1
***
TV/PD/SH