இடுகை இடப்பட்ட நாள்:
30 OCT 2026 5:14PM by PIB Chennai
பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ, கூட்டுப் போர் ஆய்வுகளுக்கான மையத்துடன் இணைந்து விஸ்வ-2026 (VISV-2026: தொலைநோக்கு, புதுமை, ஒருங்கிணைப்பு, விழுமியங்கள்) என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வை, பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் இன்று (2026 அக்டோபர் 30) புது தில்லியில் உள்ள மனேக்ஷா மையத்தில் தொடங்கி வைத்தார். “ பாதுகாப்புத் திறன்களை வெளிப்படுத்துதல், உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ” என்ற கருப்பொருளைக் கொண்ட இந்நிகழ்வில், “நட்பு நாடுகளுக்கான டிஆர்டிஓ பாதுகாப்புத் தீர்வுகள்: தொழில்நுட்பத்திலிருந்து உத்திசார் ஒத்துழைப்பு வரை” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு இடம்பெற்றது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதற்கும் சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் வழிகாட்டும் கொள்கைகளாக , தொலைநோக்கு, புத்தாக்கம், ஒருங்கிணைப்பு, விழுமியங்கள் ஆகிய நான்கு தூண்களை எடுத்துரைத்தார். 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய நாட்டின் பயணத்தின் ஒரு பகுதியாக, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, தன்னிறைவு பெற்ற பாதுகாப்புச் சூழலமைப்பை உருவாக்குவதில் இந்தியாவின் அர்ப்பணிப்பை அவர் சுட்டிக் காட்டினார். தொழில்நுட்பத் தன்னிறைவு, சர்வதேச ஒத்துழைப்புகளுக்கு இந்தியா மேலும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330472®=3&lang=1&_gl=1
(Release ID : 2330472)
SK/PLM/SH