குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நவம்பர் 24, 25 தேதிகளில் ஒடிசா பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 6:38PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2026 நவம்பர் 24 முதல் 25-ம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

2026 நவம்பர் 24 அன்று கட்டாக்கில் நடைபெறவுள்ள 2026-ம் ஆண்டுக்கான புகழ்பெற்ற பாலி யாத்திரைத் திருவிழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க உள்ளார்.

நவம்பர் 25 அன்று புவனேஸ்வரில் நடைபெறவுள்ள ஹோமியோபதி தொடர்பான தேசிய அறிவியல் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொள்கிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340478&reg=3&lang=1

(Release ID : 2340478)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340580) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Odia , Malayalam