இடுகை இடப்பட்ட நாள்:
23 NOV 2026 1:02PM by PIB Chennai
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் ஞான பாரதம் திட்டத்தின் கீழ், கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாப்பது தொடர்பான அமர்வு 2026 நவம்பர் 22-ம் தேதி அன்று புதுதில்லியில் நடைபெற்றது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகள், கையெழுத்து பிரதி வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த அமர்வில், கையெழுத்துப் பிரதியின் பாரம்பரியம், மொழிபெயர்ப்பு, எழுத்துமுறை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கையெழுத்து பிரதிகளை பாதுகாப்பது, மொழிபெயர்ப்பு, கணினி மயமாக்குதல் ஆகிய அம்சங்களில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து செயல்படுவது குறித்தும் இதில் ஆலோசனை நடத்தப்பட்டது.
பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைத்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பண்பாட்டு மன்றத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அரசியல், பொருளாதாரம், மருத்துவம், கணிதம், வானியல், வேளாண்மை, வாழ்வாதாரம் ஆகியற்றை பிரதிபலிக்கும் இந்திய கையெழுத்துப் பிரதியின் பாரம்பரியம் குறித்து கலந்துரையாடினர். பயிலரங்கில் பங்கேற்றுப் பேசிய மத்திய கலாச்சாரத் துறை இணைச் செயலாளரும், ஞான பாரதம் திட்டத்தின் செயல் அதிகாரியுமான திரு இந்திரஜித் சிங், கையெழுத்து பிரதிகள் பாதுகாப்பு அம்சங்களில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். தேசிய கையெழுத்து பிரதிகள் கணக்கெடுப்பின்படி, இதுவரை 1.26 கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் பதிவு செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340254®=3&lang=1
***
SS/LN/GS