பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வாரணாசியில் பக்தி இசை நிகழ்ச்சி - இளைஞர்களின் உற்சாக பங்கேற்புக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 11:00PM by PIB Chennai

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் நமோ படித்துறையில் நடைபெற்ற 'பஜன் கிளப்பிங்' (Bhajan Clubbing) எனும் பக்தி இசை நிகழ்ச்சியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சி அங்கு கூடியிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதாக அவர் கூறியுள்ளார்.

“எனது இளம் நண்பர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது, நிகழ்ச்சிக்கு தனிச் சிறப்பையும் புதுப் பொலிவையும் சேர்த்தது. அவர்களின் ஆற்றலும் உற்சாகமும் உண்மையிலேயே காண்போரை வியக்க வைத்தது” என்று சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339426&reg=3&lang=1

***

(Release ID : 2339426)

 TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339466) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Malayalam