சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 10:34PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் இன்று (நவம்பர் 19, 2026) நடைபெற்ற மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ‘சமாவேஷி நீதி சங்கல்ப் 2026’ (Samaveshi Niti Sankalp) மாநாட்டின் முழுமையான அமர்விற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கி உரையாற்றினார். அனைவரையும் உள்ளடக்கிய, தடையற்ற அணுகல் கொண்ட மற்றும் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க ‘முழுமையான அரசு’ அணுகுமுறை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். அரசின் நலத்திட்டங்களால் ஏறத்தாழ 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டு சமூக அதிகாரமளிப்பைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், ‘போதைப்பொருள் இல்லாத இந்தியா’ இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளி மக்களின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு பி.எல். வர்மா மற்றும் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில், போதைப்பொருள் தடுப்பு, கல்வி உதவித்தொகைகள், குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மற்றும் தடையற்ற இந்தியா (சுகம்ய பாரத்) ஆகிய நான்கு பிரிவுகளில் விவாதிக்கப்பட்டது. இதன்படி, ‘வளர்ச்சியடைந்த இந்தியா 2047’ இலக்கை நோக்கி மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் வகையில் காலவரையறையுடன் கூடிய செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338841®=3&lang=1
***
TV/SE/SH