நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வணிக ரீதியான நிலக்கரி சுரங்கங்களின் 16-வது சுற்று ஏலத்திற்கு வரவேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 4:23PM by PIB Chennai

8 மாநிலங்களில் உள்ள 26 நிலக்கரி தொகுதிகளை ஏலம் விடுவதற்கான 16-வது சுற்று, 15-வது சுற்றின் 2-வது நிலை ஆகியவற்றிற்கான ஏலப் புள்ளிகளை மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் நியமன ஆணையம் இன்று தொடங்கியது. இதில் 18 நிலக்கரி தொகுதிகளுக்கு 85 ஏலப் புள்ளிகள் பெறப்பட்டு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதில் 16-வது சுற்றில் 17 தொகுதிகளுக்கு 83 ஏலப் புள்ளிகளும், 15-வது சுற்றின் 2-வது நிலையில் ஒரு தொகுதிக்கு 2 ஏலப் புள்ளிகளும் பெறப்பட்டுள்ளன. இச்சுற்றில் 20 புதிய நிறுவனங்கள் முதன்முறையாகப் பங்கேற்றுள்ளன. ஏலதாரர்கள் முன்னிலையில் இணைய வழி, நேரடி ஏல ஆவணங்கள் வெளிப்படையாகத் திறக்கப்பட்டுத் திரையில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.

2025-26 நிதியாண்டில் வணிக ரீதியான நிலக்கரி சுரங்கங்களின் உற்பத்தி 10.22% அதிகரித்து 210.46 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. 2020-ம் ஆண்டு முதல் 15 சுற்றுகளில் 145 நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.47,500 கோடி வருவாயும், சுமார் 4.9 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வுக்குப் பிறகு, தகுதியான நிறுவனங்கள் எம்எஸ்டிசி இணையதளம் வாயிலாக நடைபெறும் மின்னணு ஏலத்தில் பங்கேற்கத் தேர்வு செய்யப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339072&reg=3&lang=1

***

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339324) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu