வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சாலையோர வியாபாரிகள், தங்களது வணிகத்தை விரிவுபடுத்த பிரதமரின் ஸ்வநிதி திட்டம் உதவுகிறது: மத்திய அமைச்சர் திரு மனோகர் லால்

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 5:37PM by PIB Chennai

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ், 2026-ம் ஆண்டுக்கான ஸ்வநிதி சம்மான் விருதுகளை மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் வழங்கினார். புதுதில்லியில் நடைபெற்ற இதற்கான விழாவில் இணையமைச்சர் திரு டோகன் சாஹு உள்ளிட்டோர. பங்கேற்றனர். மாநிலங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள் ஆகியவற்றின் சிறப்பான செயல்பாட்டைப் பாராட்டி 52 விருதுகள், 5 சிறப்பு அங்கீகாரங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

திட்டத்தின் முக்கிய சாதனைகள்:

2020 ஜூனில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், சுமார் 81 லட்சம் சாலையோர வணிகர்களுக்கு ரூ.20,000 கோடி மதிப்பிலான 1.21 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

2025 ஆகஸ்டில் திட்டம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு, முதல் ஆண்டில் 10.6 லட்சம் புதிய பயனாளிகளுக்கு ரூ.6,294 கோடி மதிப்பிலான 22 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாவது தவணைக் கடனைத் திருப்பிச் செலுத்தியவர்களுக்கு ரூ.30,000 வரை கடன் வரம்புள்ள யுபிஐ-யுடன் இணைந்த ரூபே கடன் அட்டையும் வழங்கப்படுகிறது.

52 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர் குடும்பங்களின் சமூகப் பொருளாதார விவரங்கள் சேகரிக்கப்பட்டு, 8 மத்திய அரசுத் திட்டங்களின் கீழ் 1.62 கோடிக்கும் அதிகமான நல உதவிகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், சிறு கடன்கள் மூலம் சாலையோர வணிகர்கள் தொழிலை விரிவுபடுத்த இத்திட்டம் உதவுவதாக அவர் தெரிவித்தார். தகுதியுள்ள அனைத்து வணிகர்களுக்கும் திட்டப் பலன்கள் சென்றடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இக்கடன் வழங்குவதில் சிறந்த மாநிலங்களாகத் தேர்வு செய்யப்பட்டன. அசாம், சிக்கிம், மிசோரம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களும் விருதுகளைப் பெற்றன. பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் வங்கி ஆகியவையும் அங்கீகரிக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339164&reg=3&lang=1

(Release ID : 2339164)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339288) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , Urdu , Malayalam , English , हिन्दी , Gujarati