இடுகை இடப்பட்ட நாள்:
20 NOV 2026 11:50AM by PIB Chennai
பழங்குடியினரின் தொழில்முனைவுத் திறனை ஊக்குவிக்கவும், அவர்களுக்கான சந்தை வாய்ப்புகளை மேம்படுத்தவும் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிரைபெட் நிறுவனம் சார்பில் புதுதில்லி ஐஎன்ஏ-வில் உள்ள தில்லி ஹாட்டில் 2026 நவம்பர் 16 முதல் 30 வரை ஆதி மகோத்சவம் 2026 நடைபெறுகிறது.
இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200 பழங்குடியினக் கைவினைக்கலைஞர்கள், பழங்குடியினர் வளர்ச்சி மையங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று 115 அரங்குகள் மூலம் தங்களின் கைத்தறி, கைவினைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். பாரம்பரிய கைவினைப்பொருட்கள், கைத்தறி ஆடைகள், மதிப்புக்கூட்டப்பட்ட வனப் பொருட்களை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்ய இத்தளம் உதவுகிறது.
வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து கொள்ளவும், பழங்குடியினரின் பாரம்பரியக் கலைகளை நகர்ப்புறங்களில் உள்ள நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கவும் இது வாய்ப்பளிக்கிறது. பொதுமக்கள் அனைவரும் தில்லி ஹாட்டில் நடைபெறும் ஆதி மகோத்சவத்திற்கு வருகை தந்து பழங்குடியினரின் கலைப் படைப்புகளைக் கண்டுகளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338882®=3&lang=1
***
SS/PD/SU