ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக கழிவறைகள் தினம் 2026: தூய்மையான கழிவறைகள் – கண்ணியமான எதிர்காலம் பிரச்சாரம் தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 9:01AM by PIB Chennai

உலக கழிவறைகள் தினத்தையொட்டி, தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் தூய்மையான கழிவறைகள் – கண்ணியமான எதிர்காலம் என்ற நாடு தழுவிய பிரச்சாரத்தை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர், துப்புரவுத் துறை நேற்று (2026 நவம்பர் 19) தொடங்கியது. இத்துறையின் இணைச் செயலாளரும், தேசிய திட்ட இயக்குநருமான திருமிகு ஐஸ்வர்யா சிங் இந்த பிரச்சாரத்தை இணைய வழியில் தொடங்கி வைத்தார்.

மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 வரை நடைபெறும் இப்பிரச்சாரம், கிராமப்புறங்களில் உள்ள சமுதாய, நிறுவன ரீதியான கழிவறைகளின் செயல்பாடு, பயன்பாட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. பெண்கள், மாணவிகள், மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் உள்ள கழிவறைகளைப் பராமரித்தல், ஒற்றைக் குழி கழிவறைகளை இரட்டைக் குழி கழிவறைகளாக மாற்றுதல், கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றுதல் ஆகிய நடவடிக்கைகள் இந்த பிரச்சாரத்தில் மேற்கோள்ளப்படவுள்ளன.

நாட்டில் சுமார் 89.9% கிராமங்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் அற்ற முன்மாதிரி நிலையை எட்டியுள்ளன. பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் அனைத்து கழிவறைகளையும் தூய்மையாகவும், அனைவரும் பயன்படுத்தும் வகையிலும் பராமரிக்க மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என குடிநீர், துப்புரவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338851&reg=3&lang=1

***

SS/PD/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2338921) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , हिन्दी , Nepali , Gujarati