57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா நாளை (நவம்பர் 20, 2026) தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவிலிருந்தும், உலகம் முழுவதிலுமிருந்தும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், பிரதிநிதிகள், திரைப்பட ஆர்வலர்களை வரவேற்க கோவா தயாராகி வருகிறது. வரும் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழா, திரைப்படங்கள், கலாச்சாரப் பரிமாற்றம், ஆக்கபூர்வமான ஈடுபாடுகள் மூலம் உலகத் திரைப்படச் சமூகத்தை ஒன்றிணைக்கவுள்ளது. ‘எல்லைகளற்ற கதைகள்’ என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டுத் திருவிழா, பல்வேறு நாடுகள், கலாச்சாரங்கள், திரைப் பாரம்பரியங்களைச் சேர்ந்த திரைப்படங்களையும் படைப்பாற்றல் மிக்க குரல்களையும் ஒன்றிணைத்து, திரைப்படத்தின் உலகளாவிய மொழியைக் கொண்டாடுகிறது.
கோவாவில் உள்ள டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெறும் தொடக்க விழாவில், இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இந்த விழாவில், கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2338712®=3&lang=1
****
TV/BR/SH