57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு (ஐஎஃப்எஃப்ஐ) முன்னதாக, இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனமும், பத்திரிகை தகவல் அலுவலகமும் இணைந்து, அங்கீகரிக்கப்பட்ட ஊடகப் பிரதிநிதிகளுக்கும், ஊடகத் தகவல் தொடர்புத் துறை மாணவர்களுக்கும் திரைப்பட ரசனை குறித்த பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்தன. திரைப்படம் என்ற கலை வடிவத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும். இதற்காக, திரைப்படத்தின் மொழி, அழகியல், படைப்புச் செயல்பாடுகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இது, திரைப்பட விழாவையும் அங்கு திரையிடப்படும் படங்களையும் இன்னும் ஆழமான புரிதலுடன் அவர்கள் அணுக உதவும்.
தொடக்க அமர்வில் உரையாற்றிய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குநர் திருமிகு ஸ்மிதா வத்ஸ் சர்மா, திரைப்படம் குறித்த ஊடகச் செய்திகளில் கூடுதல் ஆழமும் தரமும் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். செய்திகளின் எண்ணிக்கையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், திரைப்படத் தயாரிப்பின் கலை, தொழில்நுட்ப அம்சங்களிலும் ஊடகவியலாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் பேராசிரியர்களான முனைவர் இந்திரனில் பட்டாச்சார்யா, வைபவ் அப்னாவே ஆகியோர் தலைமையில் இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2338737®=3&lang=1
****
TV/BR/SH