இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 7:09PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டின் தொடக்க அமர்வில் மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், தேசிய புலனாய்வு முகமையின் ‘தோல்வியடையாத விசாரணை’ என்ற இதழை அவர் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்தியா பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாகவும், நீண்டகாலமாக பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வரும் நாடாகவும் இருந்து வருகிறது என்று கூறினார். எனினும், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு காவல் நிலைய அளவிலும் செயல்படுத்தக்கூடிய ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
லஷ்கர் பயங்கரவாதி லத்தீஃப் பட் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டதன் மூலம், ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்தியாவில் பிறந்த பயங்கரவாதிகளின் நடமாட்டத்திலிருந்து விடுபட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 35 ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய சூழல் உருவாகியுள்ளதாக திரு ஷா கூறினார். 2019-ம் ஆண்டு முதல், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை இந்தியாவுக்கு அழைத்து வரும் ஒரு சிறப்பு முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 36 நாடுகளிலிருந்து 303 நபர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2338703®=3&lang=1
****
TV/BR/SH