இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 4:59PM by PIB Chennai
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழுவின் 240-வது கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது.
ஓய்வு பெறும் உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி தொகையை ஒரே தவணையாகப் பெறாமல், மாதாந்திர, காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் தவணைகளாகப் பெறும் வசதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகைக்குத் தொடர்ந்து வட்டி கிடைக்கும்; 55 வயதுக்கு மேற்பட்ட சுமார் 6.32 லட்சம் உறுப்பினர்கள் இதனால் முதற்கட்டமாகப் பயனடைவர்.
குறைந்தபட்ச இருப்புத் தொகை 25%-லிருந்து 10%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இறுதித் தொகை பெறுவதற்கான காத்திருப்புக் காலம் 12 மாதங்களிலிருந்து 2 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், CITES 2.0 மூலம் கோரிக்கை தீர்வு நேரம் 11.15 நாட்களிலிருந்து 2.57 நாட்களாகக் குறைந்துள்ளது.
தொழிலாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தில் நிலுவையிலுள்ள விலக்கு வழக்குகளுக்கு 6 மாத கால அவகாசமும், மாற்று முதலீட்டு நிதிகளில் 3% வரை முதலீடு செய்யவும் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338531®=3&lang=1&_gl=1
****
TV/NB/SH