சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மருந்து மூலப்பொருட்களின் மொத்த விற்பனைக்கு தனி உரிமம் வழங்க மத்திய சுகாதார அமைச்சகம் முன்மொழிந்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 10:29AM by PIB Chennai

மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் 1945-ம் ஆண்டு மருந்து விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ள முன்மொழிந்துள்ளது. இதற்கான வரைவு அரசிதழ் அறிவிக்கை ஜிஎஸ்ஆர் எண்.987 (இ) 2026 நவம்பர் 2 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மருந்து தயாரிப்புகளுக்கான தற்போதைய உரிம விதிமுறைகளிலிருந்து மாறுபட்டு மருந்து மூலப்பொருட்களை (செயல்பாட்டில் உள்ள அல்லது செயலற்ற மொத்த மூலப்பொருட்கள்) விற்பனை செய்வதற்கு தனி விண்ணப்பப்படிவம் (படிவம் 19-பிசி), உரிமப்படிவம் (படிவம் 20-பிசி) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

தற்போது மருந்து தயாரிப்புகள், மருந்து மூலப்பொருட்கள் ஆகிய இரண்டின் மொத்த விற்பனைக்கு ஒரே உரிமம் பயன்படுத்தப்படுகிறது. இத்திருத்தத்தின் மூலம் மருந்து மூலப் பொருட்களுக்கென்று  தனியாக உரிம கட்டமைப்பு உருவாக்கப்படும். இது அவற்றின் மொத்த விற்பனையை மேலும் தீவிரமாக கண்காணிக்கவும், மருந்து விநியோக முறையில் பொறுப்புடமையை அதிகரிக்கவும் உதவும். இந்த முன்மொழிவுக்கு 2025 நவம்பர் 17 அன்று நடைபெற்ற மருந்து ஆலோசனை குழுவின் 67-வது கூட்டத்திலும், 2026 பிப்ரவரி 16 அன்று நடைபெற்ற மருந்து தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் 93-வது கூட்டத்திலும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த முன்மொழியப்பட்ட கட்டமைப்பின் கீழ் மொத்த விற்பனையாளர்கள் கையாளும் மருந்து மூலப்பொருட்களின் வகைகள் உரிமத்தில் இடம்பெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338242&reg=48&lang=1

***

SS/IR/PS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338641) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati