இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 11:09AM by PIB Chennai
பாரம்பரிய அறிவு, அறிவுசார் சொத்துரிமை, பாரம்பரிய அறிவுசார் டிஜிட்டல் நூலகம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த மத்திய கல்வி அமைச்சகத்தின் இந்திய அறிவுசார் அமைப்புகள் பிரிவு, அறிவியல் & தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தின் (சிஎஸ்ஐஆர்) பாரம்பரிய அறிவுசார் டிஜிட்டல் நூலகப் பிரிவு ஆகியவற்றுக்கு இடையே இன்று (2026 நவம்பர் 19) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய அறிவுசார் அமைப்புகள் பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கந்தி எஸ் மூர்த்தி, பாரம்பரிய அறிவுசார் டிஜிட்டல் நூலகப் பிரிவின் தலைவர் டாக்டர் விஸ்வஜனனி ஜே சட்டிகேரி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் தேசிய கல்விக் கொள்கை 2020, தற்சார்பு இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா 2047 ஆகிய இலக்குகளை முன்னெடுத்துச் செல்லவும், காப்புரிமைகள், பதிப்புரிமைகள், புவிசார் குறியீடுகள் மூலம் பாரம்பரிய அறிவைப் பாதுகாக்கவும், ஆராய்ச்சி, புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338253®=48&lang=1
***
SS/PD/RJ