வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 11:06AM by PIB Chennai
மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பில் ‘ஸ்வநிதி கௌரவ விருதுகள் 2026’ வழங்கும் விழா நாளை (2026 நவம்பர் 20) புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறுகிறது. மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் இவ்விருதுகளை வழங்குகிறார். இணையமைச்சர் திரு டோகன் சாஹு-ம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், நிதி உள்ளடக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனை, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 27 விருதுகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 21 விருதுகள், கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 4 விருதுகள், முக்கிய பங்குதாரர்களுக்கு 5 சிறப்பு அங்கீகாரங்கள் என மொத்தம் 57 விருதுகள் வழங்கப்படுகின்றன.
2020 ஜூன் 1 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் சுமார் 81 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு 1.21 கோடிக்கும் அதிகமான கடன்கள் மூலம் சுமார் ரூ.20,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்டில் இத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டு 2030 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டதுடன், உயர்த்தப்பட்ட கடன் தொகை, இரண்டாம் தவணை கடனைத் திருப்பிச் செலுத்தியவர்களுக்கு ரூ.30,000 வரம்புடன் கூடிய யுபிஐ உடன் இணைக்கப்பட்ட ரூபே கடன் அட்டை, புறநகர் பகுதிகளுக்கும் விரிவாக்கம் ஆகிய சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338250®=48&lang=1
***
SS/PD/RJ