PIB Backgrounder
azadi ka amrit mahotsav

ஆசியான் முதல் ஐரோப்பா வரை விரிவடைந்து வரும் இந்தியாவின் ஏற்றுமதிச் சூழல்

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 3:54PM by PIB Chennai

2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நாடுகள் மற்றும் முக்கிய வர்த்தகச் சந்தைகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆசியான், தெற்காசியா, கிழக்காசியா, ஐரோப்பியச் சந்தைகளில் இந்தியாவின் வலுவான ஏற்றுமதி நடவடிக்கைகள், இந்திய வர்த்தகத்தின் புவியியல் விரிவாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஓமன், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி அதிக வளர்ச்சியை எட்டியுள்ளது.

ஆசியான் நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 17.75 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், 58% உயர்ந்து தற்போது 28.06 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. குறிப்பாக சிங்கப்பூருக்கான ஏற்றுமதி 103% உயர்ந்து 11.07 பில்லியன் அமெரிக்க டாலராகவும், மலேசியாவுக்கான ஏற்றுமதி 83% அதிகரித்து 5.58 பில்லியன் அமெரிக்க டாலராகவும் பதிவாகியுள்ளது. வியட்நாம், இந்தோனேசியாவுக்கான ஏற்றுமதி தலா 36% அதிகரித்துள்ளதுடன், தாய்லாந்துக்கான ஏற்றுமதி 2.65 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. தெற்காசிய தடையற்ற வர்த்தகப் பகுதி நாடுகளுக்கான ஏற்றுமதி 22% அதிகரித்து 15.29 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதில் இலங்கைக்கான ஏற்றுமதி 73% அதிகரித்து 3.94 பில்லியன் அமெரிக்க டாலராகவும், நேபாளத்திற்கான ஏற்றுமதி 19% அதிகரித்து 4.37 பில்லியன் அமெரிக்க டாலராகவும், மாலத்தீவுகளுக்கான ஏற்றுமதி 52% அதிகரித்து 337.4 மில்லியன் அமெரிக்க டாலராகவும் உயர்ந்துள்ளது. வங்கதேசத்திற்கான ஏற்றுமதி 5.66 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

கிழக்காசியாவில், ஜப்பானுக்கான ஏற்றுமதி 40% அதிகரித்து 4.10 பில்லியன் அமெரிக்க டாலராகவும், தென்கொரியாவுக்கான ஏற்றுமதி 24% அதிகரித்து 3.91 பில்லியன் அமெரிக்க டாலராகவும் உயர்ந்துள்ளது. ஐரோப்பிய தடையற்ற வர்த்தகக் கூட்டமைப்பு நாடுகளுக்கான ஏற்றுமதி சுமார் 5% உயர்ந்து 1.03 பில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவாகியுள்ளது. இதில் சுவிட்சர்லாந்து 758.4 மில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியுடன் முன்னணியில் உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மொத்த ஏற்றுமதி 5% அதிகரித்து 38.79 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதில் ஸ்பெயினுக்கான ஏற்றுமதி 45% அதிகரித்து 4.68 பில்லியன் அமெரிக்க டாலராகவும், இத்தாலிக்கான ஏற்றுமதி 25% அதிகரித்து 4.55 பில்லியன் அமெரிக்க டாலராகவும், ஜெர்மனிக்கான ஏற்றுமதி 12% அதிகரித்து 6.34 பில்லியன் அமெரிக்க டாலராகவும், பிரான்சுக்கான ஏற்றுமதி 9% அதிகரித்து 3.73 பில்லியன் அமெரிக்க டாலராகவும் அதிகரித்துள்ளது. மேலும், ஓமனுக்கான ஏற்றுமதி 47% அதிகரித்து 3.29 பில்லியன் அமெரிக்க டாலராகவும், ஆஸ்திரேலியாவுக்கான ஏற்றுமதி 11% அதிகரித்து 4.10 பில்லியன் அமெரிக்க டாலராகவும், பிரிட்டனுக்கான ஏற்றுமதி 7% அதிகரித்து 7.32 பில்லியன் அமெரிக்க டாலராகவும், மொரீஷியஸுக்கான ஏற்றுமதி 45% அதிகரித்து 346.2 மில்லியன் அமெரிக்க டாலராகவும் உயர்ந்து, சர்வதேச சந்தைகளில் இந்தியாவின் வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337897&reg=3&lang=1

****

SK/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338229) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati