57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

57-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழா, இயற்கையோடு இணைந்த வாழ்க்கைமுறையுடன் இந்திய திரைப்படத்தின் செழுமையை எடுத்துக்காட்டுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 2:34PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2337902Views: 11

57-வது  இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை எல்லைகளற்ற கதைகள் என்ற தலைப்பின் கீழ் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி உலகளாவிய திரைப்பட உரையாடலில் இந்தியத் திரைப்படத்துறை மற்றும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கைமுறை (மிஷன் லைஃப்) பிரிவை முன்னிலைப்படுத்துகிறது. இந்தியாவின் மொழியியல், பிராந்திய கதைசொல்லல் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதோடு, மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையைத் தாண்டி சூழலியல் மாற்றங்கள் மற்றும் நிலையான இணைவாழ்வை ஆராயத் திரைப்படங்களை ஒரு காரணியாகப் பயன்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

உலகிற்காக இந்தியாவில் உருவாக்குங்கள் என்ற தேசிய பார்வையை மேம்படுத்தவும், வளரும் படைப்பாற்றல் திறன்களை வளர்க்கவும், பூமிக்கும் ஒருவருக்கொருவர் நாம் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றி சிந்திக்கச் செய்யவும் இத்திரைப்பட விழா உத்வேகம் அளிக்கிறது.

இந்தியத் திரைப்படத்துறை இவ்விழாவின் இதயத்துடிப்பாகத் திகழ்கிறது. இந்திய பனோரமா பிரிவில் 30 முழு நீளத் திரைப்படங்கள், 20 குறும்படங்கள் மற்றும் சிறந்த ஒடிடி வலைத்தொடருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வலைத்தொடர்கள் இடம்பெறுகின்றன.

இந்தத் திரைப்பட வரிசையில் 5 முதன்மைத் திரைப்படங்கள், சிறந்த அறிமுக இயக்குநருக்கான போட்டியில் பங்கேற்கும் 5 படைப்புகள், உலக, சர்வதேச, ஆசியா அல்லது இந்தியத் திரையிடல்களைக் கொண்ட புதிய பிரிவின் தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337836&reg=3&lang=1

***

SK/IR/SM/PS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2337902
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026