இடுகை இடப்பட்ட நாள்:
17 NOV 2026 7:42PM by PIB Chennai
மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், பஞ்சாபின் பதார்பூர் கிராமத்தில் நடைபெற்ற பண்ணைப் பாதுகாப்புத் திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அம்மாநில விவசாயிகளுக்கு முக்கிய திட்டங்களை அறிவித்தார். பஞ்சாப் மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் திரு குர்மீத் சிங் குதியான் முன்னிலையில், 2026–27 நிதியாண்டிற்கான பிரதமரின் தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பிரதான ஒதுக்கீட்டுத் தொகையின் இரண்டாம் தவணையாக ரூ.254.20 கோடியை விடுவிப்பதற்கான ஒப்புதல் கடிதத்தை திரு சவுகான் வழங்கினார். மாநிலத்தின் ஆண்டு செயல் திட்டத்தின் கீழ், மொத்தம் ரூ.98.44 கோடி மதிப்பீட்டிலான ஏழு புதிய வேளாண் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், உரங்களைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள், உரங்களை வாங்கும்போது கட்டாயப்படுத்தி பிற பொருட்களை வாங்க வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், போலியான பூச்சிக்கொல்லிகள், தரமற்ற வேளாண் இடுபொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்த, புதிய, கடுமையான சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் அறிவித்தார். இவற்றுடன், யூரியாவுக்கு மாற்றாக 10,000 ஹெக்டேர் பரப்பளவில் பசுமை அம்மோனியா தொடர்பான புதிய சோதனை முயற்சி மேற்கொள்ளப்படவுள்ள விவரங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கேகாணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337617®=3&lang=1
***
SK/BR/PS