சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
17 NOV 2026 6:55PM by PIB Chennai
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா கொண்டாட்டங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று தொடங்கி வைத்தார். மலேரியா ஒழிப்பில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டிய அவர், 2015 முதல் 2025 வரையிலான காலத்தில் மலேரியா பாதிப்புகளும் உயிரிழப்புகளும் சுமார் 80% குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், மலேரியா பாதிப்பு அதிகமாக இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 155-லிருந்து 33-ஆகக் குறைந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். தேவை அதிகம் உள்ள கிராமங்களையும் சமூகங்களையும், அறிவியல் ஆராய்ச்சியும் அதன் முடிவுகளும் சென்றடைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“எங்கள் உத்திகள் மற்றும் கொள்கைகளில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம், 2030-ம் ஆண்டிற்குள் மலேரியாவை ஒழிப்போம்” என்று மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நாட்டா உறுதிபட தெரிவித்தார். சுகாதாரத் துறையில் முன்னணியில் திகழும் நாடாக இந்தியா மாறுவதற்குத் தேவையான முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறும், அதற்குத் தங்களின் பங்களிப்பை வழங்குமாறும் அறிவியல், சுகாதாரச் சமூகத்தினரை அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337603®=3&lang=1
****
SK/BR/SH