இடுகை இடப்பட்ட நாள்:
17 NOV 2026 8:16AM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேசத்தின் நாம்சாயில் உள்ள தங்கக் கோபுரத்தில் (கோங்மு காம்) காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தரின் புனித நினைவுச்சின்னங்களை 2026 நவம்பர் 14, 15 ஆகிய முதல் இரண்டு நாட்களில் 12,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டுள்ளனர். முன்னதாக, தவாங்கில் 31,000-க்கும் மேற்பட்டோரும், பொம்டிலாவில் 35,000-க்கும் மேற்பட்டோரும் தரிசனம் செய்த நிலையில், 3 இடங்களிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 78,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டுள்ளனர்.
மத்திய கலாச்சார அமைச்சகம், அருணாச்சலப் பிரதேச அரசு, புதுதில்லி தேசிய அருங்காட்சியகம், சர்வதேச பௌத்த கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. 2026 நவம்பர் 14 அன்று அருணாச்சலப் பிரதேச ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் கைவல்ய திரிவிக்ரம் பர்நாயக் இதனைத் தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேசத்தின் பிப்ரஹ்வாவிலிருந்து கண்டெடுக்கப்பட்டு தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் இந்த புனித நினைவுச்சின்னங்கள், 13 ஆண்டுகளுக்குப் பிறகு அருணாச்சலப் பிரதேசத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337248®=3&lang=1
****
SK/PD/SH