சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் புலிகள் பாதுகாப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது: ஐநா பருவநிலை மாற்ற மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ்

இடுகை இடப்பட்ட நாள்: 17 NOV 2026 1:04AM by PIB Chennai

துருக்கியின் அண்டாலியாவில் நடைபெறும் ஐநா பருவநிலை மாற்ற மாநாட்டின் (சிஓபி 31) அமைச்சர்கள் நிலையிலான நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் புலிகள் பாதுகாப்பின் முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், சர்வதேச புலி இனங்கள் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் நேபாளம், வெனிசுலா, கம்போடியா, இலங்கை ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில் உருவான சர்வதேச புலி இனங்கள் கூட்டமைப்பு, உலகின் 7 முக்கிய புலி இனங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியாவில் சுமார் 85,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள 58 புலிகள் காப்பகங்கள், கார்பன் சேமிப்பு, நீர் சுத்திகரிப்பு, மண் வளப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உதவுவதுடன் 600-க்கும் மேற்பட்ட ஆறுகளின் நீராதாரமாகவும் திகழ்கின்றன. வலுவான சட்டங்கள், சமூகப் பங்களிப்பு காரணமாக இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 3,682 ஆக உயர்ந்துள்ளதுடன், இது காடுகளில் வாழும் உலகின் மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70%-க்கும் அதிகமாகும். மேலும், புலிகள் பாதுகாப்புத் திட்டம் ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் மனித நாட்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337247®=3&lang=1

****

SK/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337668) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Nepali , Marathi , Bengali , Gujarati , Kannada