இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 5:06PM by PIB Chennai
மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சகம் சார்பில், இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. நாடு முழுவதும் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றன. இதில், உடற்தகுதி, ஒழுக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, போதை இல்லா இந்தியா குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், இளைஞர்கள் என 81,622 பேர் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டிகளில் கிராமப்புற இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்றது ஆரோக்கியமான போட்டியை முன்னெடுத்தது. இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வில் விவாதிக்கப்பட்டது. பெங்களூரு, மைசூரு, சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கத்தான் மூலம் விளையாட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336989®=3&lang=1
****
SK/LN/SH