ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கான்பூர் – தில்லி இடையே புதிய விரைவு ரயில்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 5:43PM by PIB Chennai

மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், கான்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ரமேஷ் அவஸ்தி ஆகியோர் கான்பூர் சென்ட்ரல் – டெல்லி ஆனந்த் விஹார் இடையிலான புதிய விரைவு ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இந்த ரயில் தினமும் இரு வழித்தடங்களிலும் இயக்கப்படும்.

மொத்தம் 428 கிலோ மீட்டர் தூரம் செல்லும் இந்த ரயிலில் நவீன வசதிகள் கொண்ட 22 பெட்டிகள் இடம்பெற்றுள்ளன. இது பபுண்ட், எட்டாவா, துண்ட்லா, ஹாத்ரஸ், அலிகார், குர்ஜா, தாத்ரி, காசியாபாத் ஆகிய முக்கிய நகரங்கள் வழியாகச் செல்லும். இதனால் தொழிலாளர்கள், மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் பயனடைவார்கள்.

கான்பூரில் ரயில்வே கடவுப்பாதைகளால் பல ஆண்டுகளாக நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண, அன்வர்கஞ்ச் – மந்தனா இடையே 16 கிலோ மீட்டர் உயர்மட்ட ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஒப்புதல்களும் பெறப்பட்டுள்ளன. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும்.

மேலும், தில்லி, ஆக்ரா, கான்பூர், வாரணாசி, லக்னோ, அயோத்தி வழியாக பாட்னா, சிலிகுரி, கவுகாத்தி வரை செல்லும் புல்லட் ரயில் வழித்தடம் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தில்லி – கான்பூர் பயண நேரம் 1 மணி 45 நிமிடங்களாகவும், லக்னோ – கான்பூர் பயண நேரம் 27 நிமிடங்களாகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புப் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337025&reg=3&lang=1&_gl=1

(Release ID : 2337025)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337181) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Kannada