இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 4:03PM by PIB Chennai
புனேயில் மகாராஷ்டிரா முன்னாள் துணை முதலமைச்சர் அஜித் பவாரின் சிலையை மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித்ஷா திறந்து வைத்து இன்று உரையாற்றினார். இதில் மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, திருமதி சுனேத்ரா பவார், மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு முரளிதர் மோஹோல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய திரு அமித்ஷா, தாதா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அஜித் பவாரின் திடீர் மறைவு மகாராஷ்டிராவுக்கு குறிப்பாக புனே, பாராமதி, பிம்ப்ரி – சின்சிவாட் பிராந்தியங்களுக்கு ஈடு செய்ய இயலான இழப்பு என்று கூறினார். அவரது திடீர் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இது மகாராஷ்டிராவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவர் தெரிவித்தார். அஜித் பவாரின் மறைவு தனக்கு தனிப்பட்ட இழப்பு என்றும் அவர் தமக்கு நல்ல நண்பராக இருந்தாரென்றும் திரு ஷா தெரிவித்தார். அவரது மறைவால் பஞ்சாயத்து ராஜ், கூட்டுறவு, வேளாண்மை, நவீன நகர்புற மேம்பாடு ஆகிய துறைகளின் நீண்ட அனுபவமும், தெளிவான தொலைநோக்குப் பார்வையும் கொண்ட ஒரு மக்கள் தலைவரை இழந்து விட்டோம் என்று அவர் கூறினார்.
அஜித் பவாரின் ஆளுமை மிகவும் துடிப்புமிக்கதாகவும், நேர்மறையானதாகவும் இருந்தது. கண்களை மூடினால் தற்போதும் தாதா நம் முன்னே நிற்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக திரு அமித்ஷா தெரிவித்தார். அவரது எப்பொழுதும் புன்னகைக்கும் முகத்துடன் இருந்தார். எப்பொழுதும் மகிழ்ச்சியான முகம், நேர்மையான சிந்தனை, தனது எண்ணங்களைச் செயல்களாக மாற்றும் திறன் ஆகிய அரிய குணங்களை இறைவன் சிலருக்கே வழங்கியிருக்கிறார் என்றும் அஜித் பவார் மிகவும் நேர்மையானவர் என்று திரு அமித்ஷா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336914®=3&lang=1
****
SK/IR/SM/SH