இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 8:18AM by PIB Chennai
குஜராத் மாநிலம், வத்நகர் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஹட்கேஷ்வர் மகாதேவ் ஆலயத்தில், 10 நாட்கள் நடைபெறவுள்ள விஷ்வ சாந்தி மஹாயக்யாவில், 2026 நவம்பர் 18-ம் தேதி அன்று மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா பங்கேற்கவுள்ளார்.
2026 நவம்பர் 11 முதல் நவம்பர் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ள பிரம்மாண்டமான மஹாயக்யா, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முன்னிலையிலும், தெய்வீக வழிகாட்டுதலின்படியும் நடைபெறவுள்ளது. உலக அமைதி, சமூக நல்லிணக்கம், பொதுநலன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் புனித நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் தினமும் நடைபெறும் சடங்குகளில் இந்தியா முழுவதிலுமிருந்து 144 வேத விற்பன்னர்கள், பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336708®=3&lang=1
***
TV/LN/RJ