பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரஷ்ய அதிபருடன் பிரதமர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 9:49PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (31.08.2026) பிஷ்கெக்கில் நடைபெற்ற 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்  உச்சி மாநாட்டிற்கு இடையே, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினை சந்தித்தார். இந்த ஆண்டில் இது அவர்களின் முதல் சந்திப்பாகும். இதற்கு முன்னர், 2025 டிசம்பரில் தில்லியில் நடைபெற்ற 23-வது வருடாந்திர உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்திருந்தனர்.

அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, போக்குவரத்து, மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். 2026 ஆகஸ்ட் 24 அன்று மாஸ்கோவில் நடைபெற்ற வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சார விவகாரங்களுக்கான 27-வது இந்தியா-ரஷ்யா அரசுகளுக்கிடையேயான ஆணையத்தின் முடிவுகளை அவர்கள் வரவேற்றனர். 2026-ம் ஆண்டுக்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் நடைபெறும் பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா-ரஷ்யா இடையேயான ஈடுபாடு குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும், கடல்சார் வர்த்தகத்தைப் பாதித்துள்ள மேற்கு ஆசியா மோதல்கள், மாலுமிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய பிராந்திய, உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் அவர்கள் தங்கள் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். மோதல்களைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தையே வழி என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். 2026 செப்டம்பர் 12, 13 தேதிகளில் இந்தியாவில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக அதிபர் திரு விளாடிமிர் புட்டினை வரவேற்பதை ஆவலுடன் எதிர்நோக்குவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2305262&reg=3&lang=1

****

 SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2336823) வருகையாளர் எண்ணிக்கை : 18