இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிதிவண்டி பயணத்தை அதிகரிக்க வேண்டும் ஐநா பருவநிலை மாநாட்டில் இந்தியா வலியுறுத்தல்

இடுகை இடப்பட்ட நாள்: 15 NOV 2026 6:33PM by PIB Chennai

துருக்கியின் அந்தாலியா நகரில் ஐ.நா. பருவநிலை மாநாடு (சிஓபி31) நடைபெறுகிறது. இதில் இந்தியாவில் 'ஃபிட் இந்தியா' இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதிவண்டிப் பயண இயக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மக்களின் உடல்நலத்தை மேம்படுத்தவும் மிதிவண்டிப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது.

2024 டிசம்பர் 22-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த மிதிவண்டிப் பயண இயக்கம், இதுவரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 37 லட்சம் பேர் இதில் பங்கேற்றுள்ளனர். உலக மிதிவண்டி தினத்தன்று ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 4 லட்சம் பேர் கலந்துகொண்டனர்.

மிதிவண்டிப் பயணத்தை அன்றாடப் பழக்கமாக மாற்றுவதன் மூலம் வாகனப் புகையால் ஏற்படும் காற்று மாசுபாட்டையும் கரியமில வாயு வெளியேற்றத்தையும் குறைக்க முடியும் என ஐநா பருவநிலை மாநாட்டில் இந்தியா தெரிவித்தது.

அடுத்த 12 மாதங்களுக்குள் ஒவ்வொரு நாடும் குறைந்தது ஒரு சமூக சைக்கிள் பயண நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என இதில் பேசிய ஃபிட் இந்தியா இயக்கத்தின் செயல் இயக்குநர் அமர்ஜோதி அழைப்பு விடுத்தார். நவம்பர் 29-ஆம் தேதி இந்தியாவில் இந்த இயக்கத்தின் 100-வது பயணம் நடைபெறவுள்ளது எனவும், இதற்கான வழிகாட்டிக் கையேட்டையும் உலக நாடுகளுடன் இந்தியா பகிரவுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336597&reg=48&lang=2

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2336670) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati