பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 15 NOV 2026 3:03PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.11.2026) பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளதோடு, பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

நிலத்தின் தந்தை பிர்சா முண்டாவின் அசைக்க முடியாத துணிச்சல், போராட்டம், தியாகம் ஆகியவற்றை நினைவு கூர்ந்துள்ள பிரதமர், சுயமரியாதை, சுதந்திரம், உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்க அவரது மரபு ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரால் உத்வேகம் பெற்று, பழங்குடியின சகோதர சகோதரிகளின் கண்ணியம், வாய்ப்புகள், செழிப்புக்காக இந்த அரசு அனைத்து வகைகளிலும் அயராது உழைத்து வருவதாக திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேசத்தைக் கட்டமைப்பதில் பழங்குடியின சமூகத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பிற்கு அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336498&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2336566) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Malayalam