பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய வேளாண் மாநாடு 2026-ல் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றினார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2026 10:47PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இந்திய வேளாண் மாநாடு 2026-ல்  கலந்துகொண்டார். நாடு முழுவதிலுமிருந்து வருகை தந்த வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் தொழில்முனைவோர்கள் , விவசாயிகள் முன்னிலையில் உரையாற்றிய அவர், தூய்மைப் பணியில் இந்தியா டுடே ஊடகக் குழுமம் கடந்த காலங்களில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றதைப் பாராட்டினார்.

“வேளாண்மையை மேம்படுத்தாமலும், வேளாண்மையை நவீனமயமாக்காமலும், விவசாயிகளை வலுப்படுத்தாமலும் வளர்ச்சியடைந்த இந்தியா என்பதை உருவாக்குவது சாத்தியமே இல்லை” என்று திரு மோடி திட்டவட்டமாகக் கூறினார்.

கொள்கைகளும் செயல்பாட்டு முறைகளும் தொடர்ந்து பரிணமிக்க வேண்டியதன் அவசியத்தை விவசாயிகளும் வேளாண் நிபுணர்களும் உணர்ந்துள்ளனர் என்று குறிப்பிட்ட பிரதமர், உலகச் சந்தைகள், உணவுப் பழக்கவழக்கங்கள், வானிலை மாற்றங்கள், தொழில்நுட்பங்கள் காலப்போக்கில் மாறிவருவதால், விவசாயிகளைப் புதிய கோணத்தில் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

பசுமைப் புரட்சியின் மூலம் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது முதல், வெண்மைப் புரட்சியின் வாயிலாக உலகின் முன்னணி பால் உற்பத்தியாளராக மாறியது வரையிலான இந்தியாவின் வேளாண் பயணத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சியை விவரித்தார். இதன்படி, பால் உற்பத்தி சுமார் 70 சதவீதமும், முட்டை உற்பத்தி சுமார் 90 சதவீதமும் அதிகரித்துள்ளன. நீலப் புரட்சியின் கீழ் மீன் உற்பத்தி இருமடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது; இனிப்புப் புரட்சி மூலம் தேன் உற்பத்தி சுமார் 80,000 டன்னிலிருந்து 1.5 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. மேலும், தோட்டக்கலை உற்பத்தி 280 மில்லியன் டன்னிலிருந்து 350 மில்லியன் டன்னுக்கும் மேலாக உயர்ந்துள்ளது. "இந்தப் பயணம் இப்போது மிக பிரம்மாண்டமான முறையில் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதைக் காட்டும் புள்ளிவிவரங்களை நான் உங்களிடம் பகிர்ந்துள்ளேன்" என்று பிரதமர் குறிப்பிட்டார்.

கிராமப்புற இந்தியாவால்  மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற காலாவதியான மனநிலைக்கு சவால் விடுத்த பிரதமர், உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் தெளிப்பதற்காக ட்ரோன்களைத் திறமையாக இயக்கி, நமோ ட்ரோன் சகோதரிகள், சந்தேகவாதிகளின் கணிப்பைத் தவறென நிரூபித்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

விஞ்ஞானிகள், பொறியாளர்கள், இளைஞர்கள் இணைந்து, செலவைக் குறைக்கும் விதைப்பு, அறுவடை இயந்திரங்களையும், மிகச்சிறிய விவசாயிகளுக்கும் துல்லியமான தரவுகளை வழங்கும் மலிவு விலையில், சென்சார் அடிப்படையிலான, செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட கருவிகளையும் உருவாக்கி வருவதால், இந்திய வேளாண்மையில் பொறியியலின் பங்கு விரிவடைந்து வருவதை எடுத்துரைத்த பிரதமர், வேளாண் பொறியியல், வேளாண் புத்தொழில் நிறுவனங்களின் செழிப்பான சூழலமைப்பின் மூலம் பண்ணை அளவில் மதிப்புக்கூட்டலை முன்னெடுப்பதையும், விவசாயிகளை வேளாண் தொழில்முனைவோராக மாற்றுவதையும் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335664&reg=3&lang=1

***

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336177) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , Telugu , English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Kannada