மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு - ஒப்புதல் மேலாளராகப் பதிவு செய்ய நிறுவனங்களுக்கு இணையதள வசதி தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 14 NOV 2026 12:41PM by PIB Chennai

டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் 2023-ன் கீழ், ஒப்புதல் மேலாளர்களைப் பதிவு செய்வதற்கான புதிய நடைமுறை நவம்பர் 13-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், நிறுவனங்கள் பதிவு செய்யும் வகையில் https://dpbi.gov.in என்ற இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்.

ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கவோ பயன்படுத்தவோ அளிக்கப்படும் ஒப்புதலைக் கண்காணிக்கவும், மாற்றவும், திரும்பப் பெறவும் இந்த ஒப்புதல் மேலாளர்கள் உதவுவார்கள். இதன் மூலம் தங்களது தனிப்பட்ட தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதில் மக்களுக்கு அதிகக் கட்டுப்பாடு கிடைக்கும்.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே ஒப்புதல் மேலாளர்களாகப் பதிவு செய்ய விண்ணப்பிக்க முடியும். அதற்கு குறைந்தபட்சம் ரூ.2 கோடி நிகர சொத்து மதிப்பு இருக்க வேண்டும். தேவையான தொழில்நுட்பம், செயல்பாட்டுத் திறன், நிதி வசதி ஆகியவையும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை இந்திய தரவுப் பாதுகாப்பு வாரியம் ஆய்வு செய்து தகுதியான நிறுவனங்களுக்குப் பதிவு வழங்கும். பதிவு பெற்ற நிறுவனங்களின் பட்டியல் வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

தனிநபர்களின் தகவல்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் கடமைகள், விசாரணை, அபராத நடவடிக்கைகள் போன்றவை தொடர்பான சட்ட விதிகள் 2027 மே 13-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன.

விரிவான தகவல்களுக்கு மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் https://www.meity.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336151&reg=3&lang=1

(Release ID : 2336151)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336167) வருகையாளர் எண்ணிக்கை : 25
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Kannada