நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐரோப்பாவிலிருந்து வந்த தபால் பார்சலில் 10.8 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது - வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 14 NOV 2026 11:34AM by PIB Chennai

ஐரோப்பிய நாட்டிலிருந்து புதுதில்லிக்கு வந்த தபால் பார்சலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.8 கிலோ ஆம்பெட்டமைன் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது.

குறிப்பிட்ட ரகசியத் தகவலின் அடிப்படையில், புதுதில்லி வெளிநாட்டு தபால் அலுவலகத்தில் சந்தேகத்திற்குரிய பார்சலை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் துணிகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆரம்பச் சோதனையில் சாதாரண ஆடைகள் மட்டுமே இருந்தன. ஆனால் தொடர்ந்து நடத்திய தீவிர சோதனையில் அட்டைப்பெட்டியின் நான்கு பக்கங்களிலும் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 8 பொட்டலங்களில் இளஞ்சிவப்பு நிறப் பொடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனையில் அது ஆம்பெட்டமைன் போதைப்பொருள் என்பது உறுதியானது. 1985-ம் ஆண்டு போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அனைத்துப் பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தபால் வர்த்தகத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்த முயன்ற கும்பலின் பின்னணி குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336134&reg=3&lang=1

(Release ID: 2336134)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336158) வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Gujarati , Telugu