வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026-27 ஏப்ரல்-அக்டோபரில், இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 568.84 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பீடு

இடுகை இடப்பட்ட நாள்: 13 NOV 2026 5:13PM by PIB Chennai

அக்டோபர் 2026-க்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி  89.99 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது அக்டோபர் 2025 உடன் ஒப்பிடுகையில் 29.90 சதவீத நேர்மறையான வளர்ச்சியைக் குறிக்கிறது. அக்டோபர் 2026-க்கான மொத்த இறக்குமதி 110.07  பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது அக்டோபர் 2025 உடன் ஒப்பிடுகையில் 16.58 சதவீத நேர்மறையான வளர்ச்சியைக் குறிக்கிறது.

2026-27-ஆம் ஆண்டின் ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 568.84 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது; இது 16.66  சதவீத நேர்மறை வளர்ச்சியைக் குறிக்கிறது. அதே காலகட்டத்தில் மொத்த இறக்குமதி 662.19 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 16.00 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது.

அக்டோபர் 2025-ல் 34.11  பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சரக்கு ஏற்றுமதி, 2026-ல் 49.47 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. அக்டோபர் 2025-ல் 76.69  பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சரக்கு இறக்குமதி, 2026-ல் 89.35  பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335914&reg=3&lang=1

****

SK/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336081) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati