இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2026 6:36PM by PIB Chennai
மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம், லக்னோவில் உள்ள சிஎஸ்ஐஆர்-தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, “இந்தியாவின் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளில் நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு, வேளாண்-தொழில்நுட்பம், உயிர்வள தொழில்முனைவு மேம்பாடு” என்ற திட்டத்தை, 2026 நவம்பர் 12 அன்று ஒடிசாவின் கோராபுட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைத்தது.
பழங்குடிப் பகுதிகளின் வளமான மருத்துவத் தாவரப் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதும், பாரம்பரிய ஞானத்தையும் பூர்வீக உயிர்வளங்களையும் பயன்படுத்தி பழங்குடி சமூகங்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தையும் தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குவதும் இந்த மூன்றாண்டுத் திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335554®=3&lang=1
***
TV/BR/SU