சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கண்ணியத்தை உறுதி செய்யும் நமஸ்தே திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2026 6:11PM by PIB Chennai

புதுச்சேரியில் வசிக்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 58 வயது  தூய்மைப் பணியாளரான திரு முத்துவேல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீர் பாதைகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால், அவர் அபாயகரமான கழிவுகள், தீங்கு விளைவிக்கும் வாயுக்கள், இதர தொழில்சார் சுகாதார அபாயங்களுக்கு உள்ளானார்.

சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதாரச் சூழலியலுக்கான தேசிய திட்டத்தின் (நமஸ்தே) வாயிலாக, அவருக்கு முழுமையான தனிநபர் பாதுகாப்பு உபகரணத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதனால் வருமானம் அதிகரித்தது, குடும்பத்தின் நிதி நிலைத்தன்மை வலுப்பட்டதுடன், அவ்வப்போது ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கணிசமாகக் குறைந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335536&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2335647) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Assamese