சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2026 6:17PM by PIB Chennai
அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா தெரிவித்துள்ளார்.
ராஜ்கோட்டில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை வசதியை இன்று தொடங்கி வைத்து அவர் பேசினார்.
அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சைக்கான தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்த வசதி, ராஜ்கோட், சௌராஷ்டிரா பகுதியைச் சேர்ந்த மக்கள் சிறப்பு புற்றுநோய் சிகிச்சையைப் பெறுவதற்கான வாய்ப்பை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய நடவடிக்கையாகும் என்று அவர் கூறினார்.
ரூ.39 கோடி முதலீட்டில், பிரதமரின் சுகாதார பாதுகாப்புத் திட்டம் ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், சுகாதார சேவைகள் கிடைப்பதில் மண்டலஅளவிலான ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது என்று திரு ஜே பி நட்டா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331716®=48&lang=1
***
TV/SV/RJ