தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோவா திரைப்பட விழாவில் வேவ்எக்ஸ் புத்தொழில் அரங்கில் பங்கேற்க பதிவு செய்வதற்கு நாளை கடைசி நாளாகும்

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2026 12:59PM by PIB Chennai

கோவாவில் நடைபெற உள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக வேவ்ஸ் பஜாரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேவ்எக்ஸ் புத்தொழில் அரங்கில் பங்கேற்க தகுதியுடைய நிறுவனங்கள் தங்களுடைய பதிவை நிறைவு செய்யவும், கண்காட்சி பகுதிகளை முன்பதிவு செய்யவும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நினைவுபடுத்தியுள்ளது. இதற்கான முன்பதிவு நாளை நவம்பர் 13 அன்று நிறைவடைகிறது.

அமைச்சகத்தின் முன்னோடி புத்தொழில் திட்டமான வேவ்எக்ஸ்-ன் கீழ் திரைப்படம், ஊடகம், அது சார்ந்த தொழில்நுட்ப துறைகளில் (அனிமேஷன், விசுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ், எக்ஸ்டெண்டெட் ரியாலிட்டி உட்பட) செயல்படும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில்மேம்பாட்டுத் துறையில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள், புதுமைக் கண்டுபிடிப்பு தீர்வுகளை இந்நிகழ்வில் காட்சிப்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேவேஎக்ஸ் புத்தொழில் அரங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு வேவ்ஸ் பஜாரில் தங்களுடைய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்த வாய்ப்பளிக்கும். உலகளாவிய ஊடக, பொழுகுபோக்குத் துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில்  வருகை தரவுள்ள இந்த இடம் சிறந்த கட்டமைப்பு மையமாக அமையும். அத்துடன் உள்நாட்டு, சர்வதேச திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், படப்பிடிப்பு அரங்குகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் உரையாடவும் அதன் மூலம் புதிய ஒத்துழைப்புகள் வணிக கூட்டாண்மைகளை உருவாக்கவும் இது புத்தொழில் நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்.

கோவாவில் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2026 நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. இதில் வேவ்ஸ் பஜார் கண்காட்சி 2026 நவம்பர் 20 முதல் 24 வரை நடைபெறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335324&reg=3&lang=1

***

TV/IR/SM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335383) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: Gujarati , English , Urdu , हिन्दी , Marathi , Kannada