இடுகை இடப்பட்ட நாள்:
11 NOV 2026 8:38PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ரூ.560 கோடி மதிப்பிலான நான்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கடல்பகுதி நடைபாதையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து அர்ப்பணித்தார்.
ரூ.19 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கடல்பகுதி நடைபாதை வெங்கடேஷ்வரா கோவிலில் இருந்து சர்வதேச சொகுசு கப்பல் முனையம் வரை சுமார் 710 மீட்டர் (2,330 அடி) நீளத்திற்கு சுமார் 5.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதுகுறித்து பேசிய திரு சோனோவால், அங்கு வசிப்பவர்கள் கப்பல்களையும், துறைமுக செயல்பாடுகளையும் பாதுகாப்பான சூழலில் முதன்முறையாக நேரில் காண்பதற்கான வாய்ப்பை இது அளிக்கிறது என்றும், துறைமுகத்தை நகரத்துடன் இணைக்கிறது என்றும் கூறினார். இத்திட்டம் விசாகப்பட்டின மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335212®=48&lang=2
***
SS/IR/SM/RJ